இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கையின் சுற்றுலாத்துறையை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயர்மட்ட முடிவெடுப்போர் ஜெர்மனியின் பங்காளர்களுடன் கைகோர்த்துள்ளனர்.
இதற்கான நிகழ்நிலை ஆரம்பமானது இலங்கை ப்ரீட்ரிச் நவுமன் பவுன்டேஷன் ஒப் ப்ரீடம் மற்றும் இலங்கையின் ஜெர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறைப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து பர்லினை அடிப்படையாக கொண்ட மதியுரையகமும் ஆலோசனை வழங்கும் நிபுணர்களுமான லோனிங் ரெஸ்போன்சிபில் வியாபார மற்றும் மனித உரிமை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது இலங்கை சுற்றுலாத்துறை ஆலோசனைக்குழுவின் தலைவர் ஹிரான் குரே, இலங்கை உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர், இலங்கை ஹோட்டல் சங்கம், பயண முகவர் சங்கத்தின் ஓட்டுனர் சுற்றுலா வழிகாட்டிகள் விரிவுரையாளர் சங்கம் மற்றும் இலங்கை தேசிய சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் விரிவுரையாளர் சங்கத்தின் பதில் தலைவர் அனைவரும் நிலைபேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களில் அர்ப்பணிப்புடன் கைச்சாத்திட்டுள்ளனர்.



சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri