சுற்றுலாப் பயணிகளின் இலங்கை வருகை குறித்து வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டில் மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,620 ஆகும்.
சுற்றுலாப் பயணிகள்
இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,676 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,445 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,573 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,538 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,525 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 930,794 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
