நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் 37,768 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணிக்கை அதிகரிப்பு
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும், இந்தியாவிலிருந்து 34,006 பேரும்,பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 54 நிமிடங்கள் முன்

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
