நுவரெலியாவில் தொடரும் உறைபனி பொழிவு: படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் இன்று(25.01.2026) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளையில் பனிமூட்டமும் நிலவி வருகின்றது.
இவ்வாறு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குவியும் சுற்றுலா பயணிகள்
இவ்வாறான குளு குளு காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை(23) மாலை முதல் நுவரெலியாவிற்கு பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது.
விக்டோரியா தாவரவியல் பூங்காவிலும், பழமையான பிரதான தபால் அலுவலகம் பகுதியிலும் நுவரெலியா - பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள கிரகரி வாவி பகுதிகளிலும் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சூழ்ந்துள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

