பல கோடி பெறுமதியான பொருளோடு கட்டுநாயக்கவில் சிக்கிய இலங்கையர்
ஓமானில் இருந்து நாட்டுக்கு திரும்பிய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து ஒரு தொகை குஷ் போதைப் பொருளை விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
எட்டு கோடி பெறுமதி
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய, இரவு விடுதியொன்றின் பாதுகாவலாராக கடமையாற்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவரிடம் இருந்து 08 கிலோ 200 கிராம் குஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மொத்த பெறுமதி 08 கோடியே 22 இரண்டு இலட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமானின் - மஸ்கட்டில் இருந்து எட்டுப் பகுதிகளாக பிரித்து இரண்டு பொதிகளின் ஊடாக அவர் குஷ் போதைப் பொருளைக் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஒப்படைக்கவுள்ளனர்.
