வெளிநாடொன்றில் 44 பயணிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்!
எகிப்து- செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கி கப்பலொன்று கடலில் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று காலை (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆறுபேர் பலி
இந்த நீர்மூழ்கிக் கப்பல், பவளப்பாறைகளைப் பார்ப்பதற்காக வழக்கமான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 44 பயணிகள் குறித்த கப்பலில் இருந்துள்ளதுடன் அதில் 06 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 09 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலை மோசமானதாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பரில், செங்கடலில் ஒரு சுற்றுலாப் படகு மூழ்கியதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam