கேரளாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் சுற்றுலா படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (07.05.2023) பதிவாகியுள்ளது.
40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற இரண்டு அடுக்கு படகொன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

21 பேர் உயிரிழப்பு
உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்த விபத்தில் கடலில் மூழ்கி
5 குழந்தைகள், பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, படகு விபத்தில் மேலும் சில பயணிகள் கடலில் மூழ்கி மாயமான நிலையில்
அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri