சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நடப்பு ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இவ்வருடம் ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் 1,468,980 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறித்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் இலக்கு
இதேவேளை ஓகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 125,562 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அந்தவகையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 25 லட்சம் (2.5 மில்லியன்) சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் இலக்கு எதிர்பார்க்கப்பட்ட காலத்துக்கு முன்னரே பூர்த்தி செய்யப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு