முஸ்லிம் தலைமைத்துவ பலவீனமே கல்முனை வைத்தியசாலை குழப்பத்திற்கு காரணம்!
கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி பதில் சொல்ல வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்பதற்கு முடியாத குறித்த அமைப்பினரால் எப்படி ஏனைய விவகாரங்களை கையாள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 6 கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டு விட்டது.சுமந்திரன் குறித்த கூட்டணியில் இணைந்ததன் நோக்கம் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஆட்சியை அமைப்பதாகும்.
ஆகவே, கிழக்கில் முரண்பாட்டை வளர்த்து விட்டு பிறகு எவ்வாறு இணைந்து ஆட்சியை உருவாக்கப் போகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலும், சுமந்திரனும் கொண்டு வந்த எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் என்கின்ற சட்டவரைபு தான் இன்று வரை மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.
மகிந்த ராஜபக்ச வீட்டுப் பொருட்களுடன் வீதியில் காத்திருந்த நிலை..! பின்னணியில் நடந்த இரகசிய பேச்சுவாரத்தை அம்பலம்