ஒருமில்லியனை அண்மித்த சுற்றுலாப் பயணிகள் வருகை
நடப்பு ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு மில்லியனை அண்மிக்கும் நிலையை எட்டிப்பிடித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம் நடப்பு ஆண்டின் ஜனவரி 01ம் திகதி தொடக்கம் மே மாதம் 17ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒன்பது இலட்சத்தி 51 ஆயிரத்து 742 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை
அவர்களில் பெருமளவானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளனர்.
அவ்வாறு இந்தியாவில் இருந்து நடப்பு ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தி 21 ஆயிரத்து 953 பேராகும்.

அதற்கடுத்ததாக பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே போன்று இம்மாதம் 01ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 75 ஆயிரத்து 465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பதிவான நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் சிறியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வருகிறாரா அசாத் மௌலானா! சிஐடியில் திடீர் திருப்பம் - சாரா ஜெஸ்மின் தொடர்பில் அம்பலமான உண்மைகள்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri