இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
2023ஆம் ஆண்டு 20 இலட்சம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (05.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை சுமார் 530 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டியுள்ளது.
பெங்களூரில் வீதி கண்காட்சிகள்
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 482.3 மில்லியனாக இருந்தது.
இந்தநிலையில், 2023ஆம் ஆண்டின் இறுதியில் சுற்றுலாத்துறையில் மொத்தம் 3 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாகக் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி
சென்னையில், ஏப்ரல் 26ஆம் திகதி கொச்சியிலும் ஏப்ரல் 28ஆம் திகதி
பெங்களூரிலும் வீதி கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.