சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்
இலங்கைக்கு பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருமானம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.3% வளர்ச்சியாகும். 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நாடு பெற்ற சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருமானத்தின் அளவு 169 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 107,639 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 102,545 ஆக இருந்தது. 2022 பெப்ரவரியில் 96,507 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வந்திருந்தனர்.
இந்த ஆண்டு பெப்ரவரியில் இந்த நாட்டிற்கு வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, இந்தியா, பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், நாடு 321 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலா துறை வருவாயில் பெற்றுள்ளது.
இந்த வருடத்தின் இரண்டு மாதங்களில் இந்த நாடு பெற்ற சுற்றுலா துறை வருமானத்தின் அளவு 332 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய, 2023 பெப்ரவரியில், நாட்டிற்கு 407 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணம் அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கான வெளிநாட்டுப் பணம் கணிசமாக அதிகரித்துள்ளது.