2026 அமைதிக்கான நோபல் பரிசு - ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரை!
2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட மொத்தம் 287 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோர்வே நோபல் குழாம் அறிவித்துள்ளது.
ஓஸ்லோவில் செய்தியாளர்களிடம் பேசிய நோபல் குழுவின் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகன், இந்தப் பட்டியலில் 208 தனிநபர்களும் 79 அமைப்புகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நோபல் விதிமுறை
நோபல் பரிசுக்கு ஒருவரைப் பரிந்துரைப்பது என்பது அந்தப் பரிசை வழங்கும் அமைப்பு அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் கிடையாது மாறாக தகுதியுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் உலகெங்கிலும் இருந்து பலரால் பரிந்துரைக்கப்படுவது ஒரு வழக்கமான நடைமுறை என்று அவர் விளக்கமளித்தார்.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இந்தப் பரிசுக்கு இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், நோபல் விதிமுறைகளின்படி பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள் 50 ஆண்டுகளுக்கு இரகசியமாக வைக்கப்படும் என்பதால், ட்ரம்ப்பின் பெயர் இந்தப் பட்டியலில் இருப்பதை நோபல் குழாம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இவர்களுடன் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா, போப் லியோ மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரது பெயர்களும் பந்தயக் களத்தில் முன்னிலையில் உள்ளன.

மறுபுறம், 2023ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வென்ற ஈரானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதி, சிறையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நோபல் குழாம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், அவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஈரான் அரசு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

அத்துடன், 2026ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு ஒக்டோபர் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 10ஆம் திகதி முறைப்படி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan