தலவாக்கலையில் 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் 10 வயது சிறுவனை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
மேலும், குறித்த பெண்ணை மனோதத்துவ வைத்தியரின் பரிசோதனைக்கு உட்படுத்தி, அப்பரிசோதனை அறிக்கையையும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் பெற்றோர் கொழும்பிற்கு தொழில் நிமித்தம் சென்ற நிலையில், தாயின் தங்கையிடம் (சிறிய தாய்) சிறுவனை விட்டுச்சென்றுள்ளனர்.
இதன்போது ஐந்து மாத கர்ப்பிணியான சிறிய தாய் சிறுவனை அடித்து, நெருப்பினால் சூடுவைத்து சித்திரவதை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
