இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் உயர் இராஜதந்திரி!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் நாளை (23 திகதி) வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்பு கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வையிடுகிறார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார்.
நாளை வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை - அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத் தலைமை தாங்குவுள்ளனர்.
மேலும், துணைச் செயலாளர் நுலாண்ட் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று வர்த்தகத்தை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
