ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரி
அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளை பாராட்டிய அமெரிக்க அதிகாரி

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் திட்டங்கள் குறித்து லொவபக்கருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக கடல்சார் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இலங்கையின் கூட்டிணைவை அமெரிக்கா பாராட்டுகின்ற அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் லொவபக்கர் இங்கு மேலும் கூறினார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்க் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam