கடவுளின் எதிரிகளாக பெயரிடப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் - பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை "கடவுளின் எதிரிகள்" என்று அறிவித்துள்ளார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய சட்டம்
ஒரு தலைவரையோ அல்லது மர்ஜாவையோ (மத அதிகாரத்தையோ) அல்லது அரசையோ அச்சுறுத்தும் எவரும் கடவுளுக்கு எதிராகப் போரை நடத்துபவர் (முஹாரிப்) என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய சட்டத்தின் கீழ், முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் மற்றும் நாடுகடத்தப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியவர் என்று பொருள்படுகின்றது.
முஸ்லிம்கள் தங்கள் கடமையை நிறைவேற்றப் போராடும்போது ஏதேனும் கஷ்டங்களையோ அல்லது இழப்புகளையோ சந்தித்தால், அவர்கள் கடவுளின் பாதையில் போராடியதற்கான வெகுமதியைப் பெறுவார்கள் என்றும் ஷிராஸி குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த எதிரிகள் தங்கள் வார்த்தைகள் மற்றும் தவறுகளுக்கு வருத்தப்பட வைப்பது அவசியம் என்று 'ஃபத்வா'வில் கூறப்பட்டுள்ளது.