ஜெனீவாவில் இடம்பெற்ற ஈரானிய பிரதிநிதியுடனான பேச்சுவார்த்தை
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், நாளை வெள்ளிக்கிழமை ஜெனீவாவில், ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, அமைச்சர்கள் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜா கல்லாஸை ஜெனீவாவில் உள்ள ஜெர்மனியின் நிரந்தர பணிமனையில் சந்திப்பார்கள்.
பின்னர் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் கூட்டு சந்திப்பை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி திட்டம்
மத்திய கிழக்கில், விரிவான மோதல் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், இந்த ஐரோப்பிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமது அணுசக்தி திட்டத்தை, பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக, ஈரான் தரப்பு உறுதியாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை நோக்காக கொண்டே, இந்த பேச்சுவார்த்தை, நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதற்கிடையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், ஈரானின் தலைவர்களிடம் அதன் அணுசக்தி திட்டம் குறித்த உறுதிமொழிகளை உள்ளடக்கிய ஒரு தீர்வை நோக்கிச் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
