ஐ.தே.க.வின் சக்தியை நாளை மே தினத்தில் வெளிப்படுத்துவோம்! ரவி கருணாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின்(United National Party) பலத்தை நாளை மே தினத்தில்வெளிப்படுத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், ஐ.தே.க.வின் உபதலைவருமான ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, புளுமெண்டல் பிரதேசத்தில் அமைந்துள்ள ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாடு பெரும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த போது அதனைப் பொறுப்பெடுத்து தற்போதைய நிலைக்கு நாட்டை முன்னகர்த்தியவர் எங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான்.

மேடைகளில் உரத்த குரலில் கூவித் திரியும், மற்றவர்களின் உருவ அமைப்புகளை கேலி செய்யும் எவரும் குறித்த சவாலைப் பொறுப்பேற்கவில்லை. ஒதுங்கி நின்று வாய்ப் பேச்சில் மட்டும் வீரம் காட்டினார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க , பெருமளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். நாளை நடைபெறும் மே தினப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam