நாளைய போராட்டம்! பேருந்துகளை வழங்குவது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
அரசாங்கத்திற்கு எதிரப்பு தெரிவித்து நாளைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தலைநகரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பேருந்துகள் இல்லை..

இந்த நிலையில், நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்களுக்கு தமது சங்கத்தின் பேருந்துகளை வழங்கப்போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், நாளைய தினம் போராட்டங்கள் மேற்கொள்ள ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று இரவில் இருந்து மறு அறிவித்தல் வரை கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan