பாதுகாப்பாக இருங்கள்! நாளை முதல் ஏற்படப் போகும் வெப்பநிலை அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாளை (ஏப்ரல் 23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிக வெப்பம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் நடைமுறைக்கு வரும் இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அவதானம் அவசியம்..
குறிப்பிட்ட மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'அவதானம்' (Caution) மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி போதிய அளவு தண்ணீர் அருந்துங்கள். முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் செல்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் வேளைகளில் நிழலில் தங்குவது நல்லது என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.