மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு (Batticaloa) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலிரத்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி எம்.திலங்காவலவின் தலைமையிலான பொலிஸார் இத்திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
குறித்த சுற்றிவளைப்பின்போது 3 பொருள்களில் 540000 மில்லி லீற்றர், 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களோடு, சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
