உலக சந்தையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,729 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை
அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 95.86 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வேகமாக அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை தங்க நிலவரம்
இத்தகைய பின்னணியில், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, தங்கத்தின் விலை இன்று காலை 2,000 அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று மதியம் கொழும்பு தங்கச் சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 342,200 ரூபாவாகவும், 24 கரட்" தங்கத்தின் விலை இன்று 370,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri