இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதேவேளை, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 394.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam