பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (06.12.2025) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்
மேலும் மின்னல் தாக்கும் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் வெளியில் அல்லது மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பான கட்டிடம் அல்லது வாகனத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |