தமிழர் பகுதில் இரகசியமாக கட்டப்படும் விகாரை: சாணக்கியன் சீற்றம்
தமிழ்மக்களுடைய பிரச்சினையை தீர்க்க தயார் என ஜனாதிபதி கூறினாலும் தமிழ் மக்களுடைய வரி பணத்தினை பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(20.02.2024) அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அரசு, தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சில சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததுடன் சிலவற்றை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்கவோ பூர்த்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பான கொள்கையோ திட்டமிடலோ அரசிடம் இல்லை“என தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |