இலங்கையின் இன்றைய காலநிலை குறித்து வெளியான விபரம்
இலங்கையின் இன்றைய வானிலையில் சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலை நாட்டின்  மேற்கு சரிவு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri