இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டில் பொதுவாக அனைத்து பிரதேசங்களிலும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (03.08.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான நகரங்களில் காலநிலை
* யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
* கண்டி - சிறிதளவில் மழை பெய்யும்
நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை
* அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
* மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை
* கொழும்பு - சிறிதளவில் மழை பெய்யும்
* காலி - சிறிதளவில் மழை பெய்யும்
* இரத்தினபுரி - சிறிதளவில் மழை பெய்யும்
* திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
* மன்னார் - பிரதானமாக சீரான வானிலை என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |