இலங்கையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. கன மழை பெய்யும்.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
