இன்றைய காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவித்தல்
நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (23.08.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கக் கூடும்.

இதன்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை வீசும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடற்பரப்புகளில் மாற்றம்
அத்துடன், கடல் கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 தொடக்கம் 2.5 மீற்றர் வரை அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri