டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி! ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 357.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 372.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 437.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 420.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan