போராட்டக்காரர்களை அகற்றும் முறை தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் பகிர்ந்து கொண்ட ரணில்(Video)
போராட்டக்காரர்கள் கோட்டாபயவை விரட்டியதால் தான் இன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் ஏன் முயற்சிக்கவில்லை
மேலும் குறித்த பதிவில்,
போராட்டம் நடத்த விஹாரமகாதேவி பூங்காவை போராளிகளுக்கு தருவதாக கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
எனினும், யோசனையை போராளிகளுக்கு கூறி, அமைதியாக இடமாற்றம் செய்ய, ஏன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கவில்லை?
என்ன இருந்தாலும், அவர்கள் கோட்டாபயவை விரட்டியதால்தான் இன்று, ரணில் ஜனாதிபதியாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
In the morning, President RW told party leaders, he will provide ViharaMahaDevi Gardens to Protesters. Now, what prevented him from forwarding his proposal to Protesters & initiate a peaceful transfer of location? After all they sent Gota home, hence, RW is President today..! pic.twitter.com/Mk5fVIwy3h
— Mano Ganesan (@ManoGanesan) July 22, 2022



