இறம்பொடையில் பயங்கர விபத்து! நேரில் சென்ற பிரதியமைச்சர்
கொத்மலையின் கரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கர விபத்து
குறித்த பேருந்தில் 78ற்கும் மேற்பட்டோர் சென்றதாகவும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்து குறித்து விசாரிக்க பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதே முக்கியமானதாக உள்ளது.
எதிர்வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்ப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


