அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்த அறுவர் அதிரடி கைது..!
மக்கள் போராட்ட இயக்கத்தால் இன்று (03) புறக்கோட்டையில் முன்னெடுத்திருந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டப் பேரணி இன்று (03) பிற்பகல் பொரளை கெம்பல் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமானது.
ஆறு பேர் கைது
இந்தப் பேரணி பொரளை சந்தியிலிருந்து மருதானை ஊடாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்ததுடன், அங்கு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அநியாய வரிகளை நீக்கு...! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு! எனும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் கூட்டத்தில் பங்கேற்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், புறக்கோட்டையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 ஆண்டுகளாக தடுமாறுகிறோம்! தமிழ் சமூகத்தின் அடுத்தகட்டம் குறித்து மனம் திறந்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் ..