15 ஆண்டுகளாக தடுமாறுகிறோம்! தமிழ் சமூகத்தின் அடுத்தகட்டம் குறித்து மனம் திறந்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் ..
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிறந்த சிந்தனைகளையும் வழிகாட்டலையும் பிரதிபலிக்கும் புதிய தலைமையை உருவாக்க வேண்டும் என ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு தலைவர் மீண்டும் வருவார் என எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இன்னொரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நாங்கள் தேட முடியாது.
தியாகி திலீபனின் அர்ப்பணிப்பை வெறுமனே நினைவுகூர்வதுடன் நிறுத்தாமல், அவரது தியாக உணர்வை சமூகத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான உத்வேகமாக மாற்ற வேண்டும்.
தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களுக்கு வெறும் உணர்ச்சிகரமான நினைவுகூரல்கள் தீர்வாகாது எனக் குறிப்பிட்ட அவர், ஒருங்கிணைந்த செயற்பாடு, புதிய தலைமுறை மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..