தமிழரசுக்கட்சி பிளவுப்படுமோ என்ற அச்சம் இருக்கின்றது: சீ.வீ.கே.சிவஞானம்
இனிமேல் கட்சிக்குள் எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குக்கொள்ளமாட்டேன். அதனைத் தவிர்த்து கொள்வேன். பலராலும் பரிகசிக்கப்படுகிற நிலைக்கு வந்துள்ளோம். இதில் யார் சரி பிழை என்பதற்கு அப்பால் போட்டிகள் தவிர்க்கபட வேண்டும். கட்சிக்குள் பிளவுப்படவிடாமல் செயற்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பேசுபொருளாக அமைந்துள்ளது. இந்த வருடம் தேர்தல் காலம் என்பதால் இப்போது அதைப் பற்றியே பலரும் பேசி வருகின்றனர்.
கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகமொன்று தெரிவு செய்யப்படுகின்ற போது கட்சியின் அனைத்து பொறுப்புக்களும் தலைவரிடமே இருக்கும். ஆனாலும் தலைவரது பணிப்பிற்கமைய நிர்வாக கடமைகளை செயற்படுத்துகின்ற ஒருவராகவே செயலாளர் இருப்பார். அதனை விடுத்து செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றே கட்சி யாப்பிலும் இருக்கின்றது” என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
