மின்விநியோக தடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்கு சராசரியாக 29.14 ரூபய் வசூலிக்கப்படுகிறது. இதனால் 423.5 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் கூறினார்.
மின் பாவனையாளர்களில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மின்சாரத்திற்கு சராசரி விலைக்கு மேல் செலுத்தும் அதே வேளையில், குறைந்த பிரிவினருக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மானியத்துடன் கூடிய மின்சார விநியோகத்திற்கான எஞ்சிய நிதி திறைசேரியினால் ஏற்கப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மின்சார வாடிக்கையாளரும் ஒரு யூனிட்டுக்கு 56.90 ரூபாய் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.