இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கலைப்பது புத்த சாசன அமைச்சே: கஜேந்திரன் சுட்டிக்காட்டு(Video)
இந்த நாட்டில் யுத்தம் முடிந்து 18 ஆண்டுகளுக்குப் பின்னரும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு முக்கிய காரணம் புத்த சாசன அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிக்கையில்,
“தமிழர் பகுதியில் உள்ள காணிகளில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளை அகற்ற வேண்டும். தொல்பொருள் திணைக்களமானது தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் அதை கேள்விக்குட்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.
நாங்கள் சிங்கள மக்களை நேசிக்கிறோம், பௌத்த மதத்தை நேசிக்கிறோம் இதனை போற்றி பாதுகாக்க நாங்கள் உங்களுடன் முழுமையாக ஒத்துழைப்போம்" என்றார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |