200 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்: சஜித் குற்றச்சாட்டு
புதிதாக 200 மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அவற்றில் 15 மதுபானசாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (19.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான உற்பத்தி உரிமங்கள்
“தேர்தலை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஆறு மதுபான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும் அரசாங்கம் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக செயற்படவில்லை எனவும் சரியான முறையில் கேள்வி எழுப்பினால் முழுமையான பதில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இந்த நிலையில் தமது அரசாங்கம் இவ்வாறான அனைத்து சட்டவிரோத உரிமங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும். அத்துடன் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலை குறிவைத்து மதுபான உரிமம் வழங்குவது தவறானது இது தொடர்பாக அரசாங்கம் உரிய தகவலை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |