கண்டியிலிருந்து சென்ற பேருந்து விபத்து: 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கொஹொனாவெல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் நாலந்தா அரச வைத்தியசாலை, தம்புள்ளை அரச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சேதவிபரம்
இந்த விபத்தின் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பிகள் மற்றும் தொலைபேசி கம்பிகள் மற்றும் அருகில் இருந்த மதில் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றுமொரு பேருந்தை கடந்து செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam