கோட்டாபயவின் நூலை வாசிக்க நேரமில்லாத பசில்! விருப்பமும் இல்லையாம்
தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச எழுதிய நூலினை தான் இன்னும் வாசிக்கவில்லை என்றும், வாசிக்கவும் விரும்பவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கோட்டாபய ராஜபக்சவின் அந்த நூல் என்னிடம் இல்லை. கோட்டாபய அந்த நூலின்ஒரு பிரதியை எனக்கு வழங்கவில்லை.
எங்களுக்குள் பிரச்சினையில்லை
அத்துடன் அந்த டிஜிட்டல் பிரதியை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஊடகப்பிரிவு எனக்கு வழங்கவில்லை. பின்னர் தான் அந்த நூலைவாசிக்க விரும்பவில்லை.
அந்த நூலை பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் கோட்டபய நூல் ஒன்றை எழுதவுள்ளார் அதற்கான விபரங்களை சேகரிக்கின்றார் என அறிந்தேன்.
நாமல் கூட புத்தகக் கடையொன்றிலேயே அந்த நூலை வாங்கியுள்ளார். கோட்டாபயவிடமிருந்து அந்த நூல் எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை.
எங்கள் குடும்பத்தில்எந்த புரிந்துணர்வு இன்மையும் இல்லை. அவர்கள் அந்த நூலை எனக்கு வழங்காதது ஒரு பிரச்சினையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
