நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் - LIVE
செப்டம்பர் மாதத்தின் முதலாம் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.
இன்றைய அமர்வின்போது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு
குறித்த உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும்.
அதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்துச் செய்வதற்கான சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான ஓய்வூதியம் தவிர்த்து, உத்தியோகபூர்வ இல்லம், தனிப்பட்ட பணியாட்கள் உள்ளிட்ட சலுகைகளை இழக்க நேரிடும்.
நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வின் போது, சிவில், வர்த்தக பிணக்குகளுக்கான மத்தியஸ்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் 11ம் திகதி தேசிய கணக்காய்வு திணைக்களம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் மற்றும் அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025