தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு (Video)
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
இன்று (10.05.2023) ஆரம்பிக்கப்படவிருந்த X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பான இரண்டு நாள் ஒத்திவைப்பு வேளை விவாதம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
இந்நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், X-Press Pearl கப்பல் விபத்து குறித்த விவாதம் சபையில் எடுக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்காக அரசியல் கட்சித் தலைவர்களின் சுருக்கமான கூட்டத்திற்காக சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (10.05.2023) நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 06.00 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ விபத்து தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.