புதிய அரசியலமைப்பு வருமா -வராதா! கேள்வியெழுப்பும் சாணக்கியன்
புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? அப்படி வந்தால் அதில் உள்ளடக்கம் என்ன என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“எம்முடைய வடக்கு கிழக்கு மக்கள் பொறுப்புகூறல் விடயத்தில் மிகவும் கரிசனையோடு உள்ளார்கள்.
ஆனால் கடந்த காலத்திலிருந்த அரசாங்கங்களை போலவேதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசயலமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இன்று வரை அதனை பற்றிய எந்த வித கருத்துக்களும் வெளிவரவில்லை.
பொறுப்பு கூறல் விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தேர்தல் எந்தவித சாதகமான பதில்களையும் வழங்காததால் அதற்கான பதிலை தமிழ்மக்கள் எதிர்வரும் தேர்தலில் வழங்குவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |