எதிர்க்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவையில் கூச்சல் குழப்பம்....
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரைபின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் இன்று (05.01.2026) ஆரம்பிக்கப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை ஒன்றின் போது இந்த கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
ரோஹண பண்டாரவின் உயிருக்கு அச்சுறுத்தல்
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டா சமர்ப்பித்த தனக்கிருக்கும் பாதுகாப்பு அறுச்சுறுத்தல் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் எழும்பி நின்று இது தொடர்பில் பேசிய நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ,நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு கட்சியின் உள்ளக பிரச்சினையாலே உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்த நிலையில் குழப்பம் அதிகரிக்க சபாநாயகரின் தலையீட்டில் அவை நடவடிக்கைகள் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.