கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பின் பட்டிருப்பு ,கல்குடா ,மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான தபால்மூல வாக்களிக்கும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.
கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தபால்மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் பிரதான பொலிஸ் நிலையங்களிலும இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு தற்போது மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
உதவி தெரிவத்தாட்சி அலுவலர் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு பொலிஸ் நிலையங்;களில் இடம்பெற்று வருவதுடன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை
மேலும், இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(04) காலை 8:30 மணிக்கு திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.
சுமார் 87 பேர் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் 3 மூன்று பேர் சுவையினம் காரணமாக வாக்களிக்காததனால் சுமார் 84 பேர் வாக்களித்தனர்.
அத்தோடு, கட்சிகளின் முகவர்கள் இவ்வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகியுள்ளனர்.
செய்தி - ரொஷான்
வாக்காளர் அட்டை
இந்நிலையில், வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று நாடுபூராகவும் ஆரம்பமாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக சென்று விநியோகித்துள்ளனர்.
செய்தி - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |