தங்கத்தின் விலையில் இன்று பதிவான மாற்றம்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) கணிசமான அளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அதன்படி கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 209,000 ரூபாவாக உள்ளது.
அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 192,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை
கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 212,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 195,800 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,652.35 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam