இலங்கையில் தங்க நகை வாங்க உள்ளோருக்கான முக்கிய செய்தி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (20.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவல்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 650,240.18 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 646,540 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,787 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,294 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 152,436 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,055 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,188 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 145,507 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri