வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, இன்று (14) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.57 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 300.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலர் மற்றும் யூரோ
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364.79 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 378.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.02 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 315.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204.14 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 212.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.53 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 191.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)