எதிரணிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று வருகின்றது தேர்தல் செலவின சட்டமூலம்
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று (19.01.2023) விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று (19.01.2023) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்துக்கு முன்னதாக இந்தச் சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அதில் பங்கேற்கவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
